Saturday, December 4, 2010

புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கும வேண்டிய அளவிற்கும் எளிதாக மாற்ற

சின்ன சின்ன சாப்ட்வேர்கள் அருமையான செயல்களை செய்துவிடும். அதைப்போல 1 எம்.பி.க்கும் குறைவாக உள்ள இந்த இலவச சாப்ட்வேரானது நமது புகைப்படங்களை வேண்டிய அளவிற்கும் - வேண்டிய பார்மெட்டுக்கும் எளிதில மாற்றிட பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.









இதில் உள்ள Add Picture கிளிக் செய்து உங்களது ஒரு புகைப்படமோ அல்லது ஒரு போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையோ தேர்வு செய்யுங்கள்.மேலே உள்ள பிரிவியுவில் உங்களுக்கு அனைத்துபடங்களும் தெரியவரும். கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.









இதன் வலதுபுறம் தேவையான அளவுகள் இருக்கும் .புகைப்படம் உங்களுக்கு எந்த அளிவில தேவையோ அந்த அளவினை தேர்வு செய்யுங்கள்.









அதைப்போலவே புகைப்படம் எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.









நீங்கள் JPG தேர்வு செய்திருந்தால் அதன் தர அளவினை வேண்டியஅளவிற்கு வைததுக்கொள்ளுங்கள. எளிய விளக்கத்திற்கு விண்டோ கீழே-












இறுதியாக Output கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமியுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில் பாருங்கள்.









எளிய வேலையாக முடிந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப



இது பலருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம் தான் எனினும் தெரியாதவர்களுக்காக இத்தகவல் . நம் மின் அஞ்சலில் ( யாஹூ , ஜிமெயில் , yahoo , gmail ) 25 mb அளவுக்கு மேல் உள்ள வீடியோ போன்ற கோப்புகளை அனுப்பவது மிகவும் கடினம் , மேலும் நீங்கள் மென்பொருட்கள் , மற்றும் system 32 போன்ற கோப்புகளை மின் அஞ்சலில் அனுப்ப முடியாது . பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வகையான கோப்புகளை மின் அஞ்சல் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. எனவே நாம் அனுப்ப வேண்டிய கோப்பை ஏதாவது ஒரு இலவச சர்வர் (server) இல் ஏற்றி விட்டு அதன் பின்பு அந்த செர்வெர் / அல்லது தளத்தின் நேரடி லிங்கை அனுப்புவதின் மூலம் நம் இவ்வகையான கோப்புகளை எளிதாக பரிமாறிக் கொள்ளலாம் . இதன் மூலம் 1 mb முதல் 250 mb வரையான எவ்வகையான கோப்புகளையும் இலவசமாக அனுப்பலாம் . இது போன்ற தளங்களில் நீங்கள் கோப்புகளை ஏற்றுவது மிகவும் சுலபம் .ஒரு முறை உங்கள் பயனர் கணக்கை உருவாக்கி அதன் பின் upload என்ற option ஐ சொடுக்கி உங்களுக்குத் தேவையான கோப்புகளை ஏற்றிகொள்ளுங்கள் .இத்துடன் இன்னொரு வசதியும் இதில் உண்டு நீங்கள் அனுப்பும் கோப்பை உங்கள் நண்பர்கள் ஒவ்வொருமுறை தரவிறக்கம் செய்யும் போதும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். ஆம் இன்று முதல் உங்கள் பெரிய கோப்புகளை இந்த தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதன் மூலம் பணமும் வந்த மாதிரி இருக்கும் , அப்படியே உங்கள் கோப்பை அனுப்பிய மாதிரியும் இருக்கும் . கீழே உள்ள தளங்கள் தான் நான் பயன் படுத்துபவை ( referral code உடன் உள்ளது ) நீங்களும் முயற்சி  செய்து பாருங்கள் .

Saturday, November 20, 2010

Tutorial coreldraw x3

creation animation using photoshop

சிங்கம்

மைனா

Saturday, May 8, 2010

Friday, March 12, 2010

Thursday, March 11, 2010

லில்லி மலர்

புன்னகை அரசி

Tuesday, February 9, 2010

JUST FOR JOLLY PHOTOS:-

ஏய்! மொத்தப்பழத்தயும் நான் தான் சாப்பிடுவேன் உனக்கு தரமாட்டேன் போ....!வவ் வவ்...!

ரெடி ஸ்டார்ட் ஒன் டு த்ரி - - - - -

இது தான் ஆரம்பம் இனி தான் பூகம்பம் காத்திருங்கள் விரைவில் எதிர்பாருங்கள்!

Thursday, February 4, 2010

நல் வரவு

இந்த தளத்திற்கு தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்